;
Athirady Tamil News

மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் இனந்தெரியாத ஆணிண் சடலம் மீட்பு..!!

0

தலவாகலை மேல்கொதமலை நீர் தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இனந் தெரியதாக சடலம் இன்று சனிக்கிழமை மாலை 04 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

சடலமானது இறந்து சில நாட்கள் கழிந்துள்ள நிலையில் மலையகத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக கரை ஓதுங்கியுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா நீதிமன்ற நீதவான் வரவழைக்கபட்டு மரண விசாரனைகள் இடம்பெற்றவுடன் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்ககாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட உள்ளதாக தலவகலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*