;
Athirady Tamil News

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் இம்ரான் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிப்பு..!!

0

பாகிஸ்தான் அதிபராக பதவி வகிக்கும் மம்னூன் ஹுசைனின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக வரும் செப்டம்பர் 4-ம் தேதி அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இம்மாதம் 27-ம் தேதிவரை தாக்கல் செய்யலாம். வேட்பாளர் இறுதிப்பட்டியல் 30-ம் தேதி வெளியாகும். இந்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சட்டசபை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆளும்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் டாக்டர் ஆரிப் ஆல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இம்ரான் கான் அந்நாட்டின் 22-வது பிரதமராக இன்று பதவியேற்ற சில நிமிடங்களுக்கு பின்னர் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல் டாக்டராக தொழில் செய்துவரும் ஆரிப் ஆல்வி(69) இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தொடக்கக்கால தலைவர்களில் ஒருவராவார். கடந்த 2006-2013 காலகட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ள இவர், சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கராச்சி தொகுதியில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 10 =

*