;
Athirady Tamil News

கிராமம்புற படசாலை மாணவர்களுக்கு வர்த்தகரால் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

வவுனியாவில் கிராமப்புற பாடசாலை மாணவர்களுக்கு வர்த்தகர் ஒருவரால் பாடசாலை உபகரணங்கள் நேற்று (18) மாலை 7.00 மணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அம்பாள் மோட்டார்ஸ் உரிமையாளர் எஸ்.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் திருத்துனர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வொன்றிலேயே குறித்த வர்த்தகரால் ஐந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய வர்த்தகர்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் தங்கள் உரிமைகளையும் அதிகாரத்தையும், எதிர்காலத்தில் கல்வி ஒன்றின் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும் அதனால் மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − six =

*