;
Athirady Tamil News

தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் ஐனநாயக விழுமியங்கள் இல்லை..!!

0

தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் ஐனநாயக விழுமியங்கள் இல்லை, ஒரு சர்வாதிகார போக்கான நிலைமையே அங்கு இருக்கின்றது! வன்னி பாராளுமன்ற உறுப்பினர்!

தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் இப்படிபட்ட ஐனநாயக விழுமியங்களை நாம் பார்க்க முடியவில்லை.ஒரு சர்வாதிகார போக்கான நிலைமையே அங்குஇருக்கின்றது என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார் வவுனியாவில் (17) நடைபெற்ற வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 20 வது வருட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதேமற்படி கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்

இந்தசங்கம் மிகவும் வெளிப்படை தன்மை,ஐனநாயகரீதியான செயற்பாடு,சரியான நிதி அறிக்கை மற்றும் பல்வேறுபட்ட கட்டுப்பாடுகளுடன்,சமூகவேலைகளை செய்துவருவதையிட்டு நாம் பெருமிதமும்,மகிழ்சியும் அடைகின்றோம.; உங்களைபார்த்து நாம் பொறாமைபடுவர்களாக இருக்கிறோம்.ஏனெனில் நாமும் கிட்டதட்ட 15 வருடங்களுக்கும் மேலாக ஒரு இனத்தின் விடுதலைக்காக கூட்டமைப்பாக இருந்தொம் ஆனால் 15 வருடங்கிளில் இதுபோல ஒரு கணக்கறிககைகளை எம்மால் பார்க்கமுடியவில்லை.

இந்தசங்த்திற்கு ஒரு யாப்பு,வங்கிகணக்கெல்லாம் இருக்கின்றது.அதனைவிட ஐனநாயக ரீதியாகதெரிவுசெய்யப்படுகின்ற ஒரு நிர்வாகம் இருக்கின்றது.ஒரு போக்குவரத்துசங்கத்திற்கு இருக்ககூடிய இந்தவிடயங்கள் ஒரு இனத்தின் விடுதலைக்கு தலைமைதாங்குகின்ற தமிழ்தலைமைகளிடம் அல்லது தமிழ்தேசியகூட்டமைப்பிடம் இப்படிபட்ட ஐனநாயகவிழுமியங்களை நாம் பார்க்கமுடியவில்லை.ஒரு சர்வாதிகாரபோக்கான நிலைமையே அங்குஇருக்கின்றது.

எனவே தமிழ்தலைமைகளுக்கு உங்களுடையசங்கம் மிகவும்முன்மாதிரியாக இயங்குவதையிட்டு நாம் மகிழ்சியும் சந்தோசமும் அடைகின்றோம்.

அத்துடன் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருப்பதனை நாம் அறிவோம. இன்று அரச. தனியார் பேருந்துகளிற்கிடையில் மிகவும் போட்டியான நிலைமைகள் இருந்துவருகின்றன.அவற்றைதீர்த்து வீதியில் செல்வோர் மற்றும்; பிரயாணிகளின் பாதுகாப்பை பேணுவதில் பேருந்துஉரிமையாளர்கள் மற்றும் சாரதிகள்,நடத்துனர்களின் கைகளிலே மிகப்பெரிய பொறுப்பிருக்கிறது.அதனை நாம் அனைவரும் உணரவேண்டும்.

வடக்கிலே வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றது வவுனியாமண்ணிலே அதனை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை அனைவரும் எடுக்கவேண்டும்.இது தொடர்பாக வவுனியா மாவட்ட அரசஅதிபருடனும் தான் பேச்சுக்களை நடாத்தியுள்ளதாக தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 2 =

*