;
Athirady Tamil News

தனிமையில் இருந்த யுவதியின் வீட்டுக்குள் புகுந்த இளைஞருக்கு நீதிபதி கொடுத்த உத்தரவு..!!

0

திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையில் இருந்த யுவதியொருவரின் வீட்டுக்குள் புகுந்த இளைஞரொருவரை இம்மாதம் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

அக்போபுர – தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் அக்போபுர பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டுக்குள் புகுந்ததாகவும் குறித்த பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, யுவதி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*