;
Athirady Tamil News

யாழில் 81 தென்னிலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு விடுதலை..!!

0

யாழ்.நாகர்கோவில் பகுதியில் இரவில் கடலட்டை பிடித்த 81 தென்பகுதி மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 21 படகுகளும் கைப்பற்றப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலை வெளிச்சம் பாய்ச்சி கடலட்டை பிடியில் ஈடுபட்டிருந்தபோதே அவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

எனினும், யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்களம் குறித்த மீனவர்கள் இரவில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர்களை விடுதலை செய்தது.

இதனிடையே இரவில் கடலட்டை பிடிக்க கூடாது என்பது சட்டமாக உள்ள நிலையில் அவர்கள் விடுதலைசெய்யப்பட்டமை தொடர்பில் கடற்படையினரும் நாகர்கோவில் மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் தாம் கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் ஒப்புதலின் பேரிலேயே அவர்களை விடுதலை செய்ததாக கடற்படையினர் மீனவர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*