;
Athirady Tamil News

ஈ.பி.டி.பி- நாமல் ராஜபக்ச இரகசிய சந்திப்பு..!!

0

மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சவிற்கும், ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் நேற்று இரகசிய சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது. கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்பதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இரண்டு வாரங்களின் முன்னர், நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் டக்ளஸ் தேவானந்தாவும் சாதாரணமாக பேசியிருந்தார்கள். வடக்கில் தமது அணி பிரமாண்டமான மக்கள் சந்திப்புக்களை நடத்த உதவி கோரியிருந்தார் மஹிந்த. அப்போது, மஹிந்த அணியின் இனப்பிரச்சனை தீர்வு திட்டங்களை பகிரங்கப்படுத்தாமல் இந்த முயற்சிகளில் இறங்க முடியாது, மக்கள் அதை ஆதரிக்க மாட்டார்கள் என டக்ளஸ் தேவானந்தா அப்போது குறிப்பிட்டிருந்தார் என ஈ.பி.டி.பியின் பிரமுகர்கள் தமிழ்பக்கத்திடம் தகவல் தந்திருந்தனர்.

இது தொடர்பில் பின்னர் இரண்டு தரப்பும் பேசலாமென அப்போது மஹிந்த குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே நேற்றைய சந்திப்பு நடந்ததென தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

இந்த சந்திப்பிற்கான முயற்சி நாமல் தரப்பிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பியை தொடர்புகொண்டு வசதியான நேரத்தை கோரியிருந்தார். நேற்று பின்மாலை பொழுதில் சந்திப்பிற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

நேற்றைய சந்திப்பு தொடர்பில் தகவல் தந்த ஈ.பி.டி.பி பிரமுகர்களின் தகவல்படி, நேற்று திட்டவட்டமான அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் பேசப்படவில்லையென தெரிகிறது. இரண்டு தரப்பிற்குமான சந்திப்பின் தொடக்கமாக நேற்றைய சந்திப்பு அமைந்திருந்தது.

இனப்பிரச்சனை தீர்வு முயற்சியை உண்மையாக ஆரம்பிக்கவுள்ளதாகவும், தமது அடுத்த ஆட்சிக்காலத்தில் அதை நிறைவேற்றியே தீருவோம் என்றும் நேற்று ஈ.பி.டி.பிக்கு நாமல் உத்தரவாதமளித்துள்ளார். ஆனால், அது என்னவிதமான வடிவமென்பதை பல தரப்புடனும் பேசி தீர்மானிக்கலாமென்றும் நாமல் தரப்பில் கூறப்பட்டது.

நேற்று பொதுவான அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவே அதிகம் பேசப்பட்டுள்ளது.

நேற்றைய சந்திப்பில் நாமல் ராஜபக்ச அதிகம் ஆங்கிலத்தில் உரையாடியதாக தெரிகிறது. நாமல் ராஜபக்சவின் ஆங்கில புலமையை நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்ட ஈ.பி.டி.பி தரப்பினர் விதந்தோதியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*