;
Athirady Tamil News

மூச்செடுத்த மூன்று வருடங்கள் வேலைத்திட்டம்..!!

0

அரச காணிகளுக்கான அனுமதி பத்திரத்தை பெற்றுள்ளவர்களுக்கு நிரந்தர காணி உறுதிகளை வழங்கும் பணிகளை துரிதப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரசிங்க தெரிவித்துள்ளார்.

பத்து இலட்சம் காணி உறுதிகளை பகிர்ந்தளிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மாத்தறை மாவட்ட நிகழ்வு தெனியாய பஸ்கொட பிரதேச செயலகத்தில் நேற்று (18) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தென் மாகாணத்தில் காலி, வெலிகம மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்படும். தெனியாய மற்றும் காலி பிரதேசங்களை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் மூன்று வருட பூர்த்தியை முன்னிட்டு மூச்செடுத்த மூன்று வருடங்கள் என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன.

கேகாலை மாவட்ட நிகழ்ச்சித் திட்டம் நாளை கேகாலை சுதந்திர மாவத்தையில் இடம்பெறும். அங்கு இரண்டாயிரத்து 500 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படும். காலி மாவட்ட நிகழ்ச்சித் திட்டம் பத்தேகம பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் செவ்வாய்கிழமை இடம்பெறும். அங்கு நான்காயிரம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 13 =

*