;
Athirady Tamil News

மாணவர்களின் இயல்பான கற்றல் நடவடிக்கைகளுக்காக ஈருறுளிகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த வறிய மாணவர்களுக்கும், தூரப் பிரதேசங்களில் இருந்து பாடசாலைக்கு தினமும் சென்று வருவதற்கு பலத்த நெருக்கடிகளை சந்திக்கும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை இலகுவாக்கும் நோக்கோடும் எமது கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் வடக்கு மாகாண சபையினுடைய கல்வி அமைச்சரும், வட மாகாண சபையின் உறுப்பினருமான கௌரவ த.குருகுலராஜா அவர்களினுடைய மாகாண சபையினுடைய குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து மாணவர்களுக்கான ஈருறுளிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையினுடைய முன்னாள் கல்வி அமைச்சரும் மாகாண சபையினுடைய உறுப்பினருமான கௌரவ த.குருகுலராஜா மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவர் கௌரவ சு.சுரேன் ஆகியோருடன் இத்தாவில் பிரதேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர்களும் உடனிருந்தனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 1 =

*