;
Athirady Tamil News

பூநகரி பிரதேசத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான மாட்டுவண்டில் சவாரி சிறப்பாக இடம்பெற்றது..!! (படங்கள்)

0

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான மாட்டுவண்டில் சவாரி சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த விளையாட்டு நிகழ்வு இன்று கிளிநொச்சி பூநகரி நல்லூரில் அமைந்துள்ள சவாரி திடலில் இடம்பெற்றது. இன்று மாலை 3 மணியளவில் ஆரம்மான குறித்த போட்டிக்காக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 70 ஜோடி மாடுகள் அழைத்த வரப்பட்டன.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த போட்டியில் பலரும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். குறித்த இன்றைய விளையாட்டினை பூநகரி சவாரி சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 11 =

*