;
Athirady Tamil News

காஷ்மீரில் கண்ணிவெடியில் சிக்கி ராணுவ வீரர் பலி…!!

0

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே குலாப்போஸ்ட் என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் உள்ள சாலையில் ராணுவ வீரர்கள் சென்றபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் அவர்களது கால்கள் பட்டதும், அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கு உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒருவர் பலியானார். மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்ணிவெடி தாக்குதலில் பலியான ராணுவ வீரர் பெயர் தல்பிர்சிங் என்பது பின்னர் தெரியவந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 13 =

*