தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது..!!

ஆணமடுவ, ஆன்டிகம பகுதியில் உணவகம் ஒன்றை தாக்கி சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (19) இரவு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தப்பிச் சென்று ஆன்டிகம, கல்குளிய பகுதியில் தலைமறைவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு பிரதான சந்தேக நபரின் மனைவி இரகசியமான முறையில் சந்தேக நபர்களுக்கு உணவு எடுத்துச் சென்ற போது அவரை பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் குழு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் சில தினங்களாக குறித்த உணவகத்தில் உணவருந்தி விட்டு பணம் செலுத்தாததே இந்த தாக்குதலும் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
அப்பிரதேசத்தில் இருக்கும் அரசியல்வாதி ஒருவரின் ஆணையின் பிரகாரமே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பிரதான சந்தேக நபர் தெரிவித்திருப்பினும் அவவாறான எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லை என உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஆணமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.