;
Athirady Tamil News

ராஜீவ் காந்தி பிறந்த நாள் – நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை..!!

0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அங்கு சென்று மரியாதை செலுத்தினார்.

இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 11 =

*