;
Athirady Tamil News

வவுனியாவில் இளைஞர் ஒருவர் தூக்கில்தொங்கி தற்கொலை..!!

0

கோவில்குளம் பகுதியில் நேற்றுஇரவு தூக்கில்தொங்கியநிலையில் இளைஞர்ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருகையில் வவுனியா கோவில்குளம் 5ம் ஒழுங்கை பகுதியில் உள்ளதனது வீட்டில்இருந்த இளைஞர் ஒருவர் நேற்றுஇரவு 12 மணியளவில் தனது அறையினுள்சென்று போர்வையைபயன்படுத்தி தூக்கில் தொங்கியநிலையில் அவரது உறவினர்களால் மீட்கபட்டு வவுனியாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் வைத்தியசாலைகொண்டு செல்லும் முன்னமே அவர் சாவடைந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் கோவில்குளத்தை சேர்ந்த க.கதிர்செல்வன் வயது 30 என்ற இளைஞரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 9 =

*