;
Athirady Tamil News

வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதலை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலை முன்பாக இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட கண்டனப்போராட்டம் சுமார் அரைமணிநேரம் வரை நீடித்தாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தொிவித்துள்ளனர்.

இதன்போது, தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைதுசெய்யவேண்டுமென கோரிக்கை விடுத்த வைத்தியர்கள், கைது செய்யப்படாவிடின் தாம் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘மக்கள்சேவை பரிசு வாள்’, ‘பொது மக்களின் சாதாரண வாழ்க்கைக்கான இடையூரை இல்லாமல் செய்’, ‘யாழ்.மண்ணில் சட்டஒழுங்கு யார் கையில்’, போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்.கொக்குவில் சம்பியன் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டுக்குள் நேற்று அத்துமீறி உள்நுழைந்த வாள் வெட்டுக்குழு, வீட்டின் யன்னல் கண்ணாடிகள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திய பின்னர் தப்பிச்சென்றமையை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*