;
Athirady Tamil News

குற்றசாட்டுகள் அடங்கிய ஆவணங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கையளித்தார் மா. உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்..!!

0

வவுனியா வடக்குபிரதேச செயலாளருக்கு எதிராக 55 குற்றசாட்டுகள் அடங்கிய ஆவணங்களை கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று கையளித்தார் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்!!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமனுக்கு எதிரான சுமார் 55 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்கள் மாகாணசபை உறுப்பினர்ஜி.ரி.லிங்கநாதனால் இன்றயதினம் கொழும்பில்அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயலாளர்திருமதி சாந்தி ஜெயசேகரா அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதன் போது இதற்கான நடவடிக்கையினை உடன் எடுப்பதாகஆணைக்குழுவின் செயலாளர் உறுதி மொழியளித்திருந்ததாக தெரிவித்த மாகாணசபை உறுப்பினர்

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிரஅபேவர்தன, கணக்காய்வாளர் நாயகம் திரு.குணவர்தனஅவர்களிடமும் குறித்த 55 குற்றசாட்டுகள் கொண்ட ஆவணங்களை கையளித்ததாகவும் தெரிவித்தார். அவர்களும்இதற்கான தகுந்த நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்று உறுதிமொழியளித்திருந்ததாக மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 15 =

*