;
Athirady Tamil News

வவுனியாவில் சிலம்பாட்டம் பயிற்சிபட்டறை..!! (படங்கள்)

0

பசுமைக்கான புரட்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழரின் தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் பயிற்சி பட்டறை மடுக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய விளையாட்டுத்திடலில் நேற்றயதினம் இடம்பெற்றது.

தமிழரின் பாரம்பரியம் மீட்போம் எனும் தொணிப்பொருளில் பசுமைக்கான புரட்சி இயக்ககத்தின் ஒருங்கிணைப்பாளர் ந.வினோதனால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்விற்கு இலங்கை சிலம்பு சம்மேளனத்தின் செயலாளர் கே.ஆர் திவாகரன் ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக பங்கு கொண்டிருந்ததுடன் 40ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு கொண்டு பயிற்சிகளை கற்றுகொண்டனர். பயிற்சியின் நிறைவில் சான்றிதழும் வழங்கிவைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்தநிகழ்விற்கு ஜேர்மன்நம்பிக்கையொளி அமைப்பு , தமிழ் விருட்சத்தை சேர்ந்த கண்ணன், மாணிக்கம் ஜெகன், வழக்கறிஞர் நாகேந்திரன் ஆகியோர் நிதி அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*