;
Athirady Tamil News

உயிருக்கு போராடிய பிரித்தானிய பயணிகளிடம் கட்டணம் வசூலித்த Uber..!!

0

அலுவலக பணி காரணமாக பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் நோக்கி உபரில் சென்ற இருவர், ஓட்டுனரின் கவனக்குறைவால் கடலில் மூழ்கி, மயிரிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Nick Christoforou (31), Sophia Toon (23) என்ற இருவரும் Cockfosters பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

தங்களது வேலை பயணமாக நேற்று இருவரும் Uber-ல் தெற்கு பிரான்ஸ் நோக்கி பயணம் செய்துள்ளனர். அப்பொழுது ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக திடீரென கார் கடலுக்குள் புகுந்தது.

இதில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஒரு வழியாக கதவை திறந்து கொண்டு வெளியில் வந்த Nick, அங்கிருந்த மற்றவர்களின் உதவியுடன் காரில் சிக்கியிருந்த இருவரையும் மீட்டார்.

பின்னர் இதுகுறித்து பேசுகையில், நான் மட்டும் காரில் இருந்து வெளியில் வரமுடியாமல் போயிருந்தால், நாங்கள் 3 பேரும் 100 சதவிகிதம் இருந்திருப்போம். இப்பொழுது வரை என்ன நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், நல்ல வேலையாக கடலில் விழுந்த கார் மெதுவாக மூழ்கியது, இல்லையென்றால் மூன்று பேருமே உயிரிழந்திருப்பார்கள் என தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில் Uber நிறுவனம், காரில் பயணம் செய்த வாடகையாக Nick கணக்கிலிருந்து £18 பவுண்டை எடுத்துக்கொண்டது.

பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது பணத்தை திருப்பி கொடுத்ததோடு, இழப்பீடாக £ 800 பவுண்ட் வழங்கியது, ஆனால் Nick அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 1 =

*