;
Athirady Tamil News

சிகிச்சைக்கு வந்த பெண்ணையே பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவர்: மேலும் அதிர்ச்சி தகவல் உள்ளே..!!

0

அமெரிக்காவில் ஆஸ்துமாவால் அவதிப்பட்ட ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒரு மருத்துவர், அந்தப் பெண்ணையே தவறானவள் என குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Laura Perilla-Vargas (27), ஆஸ்துமா பிரச்சினைக்காக Houstonஇலுள்ள Ben Taub மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு Lauraவின் நிலைமை தீவிரமடைந்ததால் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது

Laura மயங்கிய நிலையில் இருக்கும்போது யாரோ ஒருவர் தனது அறைக்குள் நுழைவதையும் தன்னை தவறான இடங்களில் தொடுவதையும் உணர்ந்திருக்கிறார்.

இதே போல் இரண்டு முறை நிகழ்ந்த நிலையில் மூன்றாவது முறை அந்த அறைக்குள் வந்த அதே நபர் இம்முறை Lauraவை பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்

சரியான சுய நினைவு இல்லாத நிலையிலும் தப்பிக்க போராடிய Laura, அவசர உதவிக்காக வைக்கப்பட்டிருந்த மணிக்கான பொத்தானை அழுத்தியிருக்கிறார். ஆனால் அந்த நபர் ஏற்கனவே அந்த மணியை செயலிழக்கச் செய்திருந்தார்.

ஓரளவு நினைவு வந்தபின் நர்ஸ்களிடம் Laura நடந்ததைக் கூற அவர்கள் அவரை நம்பவில்லை.Laura பல முறை வற்புறுத்திய பிறகு அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறாரா என்பதை அறிவதற்கான சோதனை நடத்தப்பட்டு உண்மை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இதைச் செய்தது யார் என்பதைக் கண்டறிவதற்காக CCTV கெமராக்கள் மற்றும் அறைக்குள் நுழைய பயன்படுத்தும் ID கருவி ஆகியவறை சோதித்ததில் Dr. Shafeeq Sheikh என்னும் மருத்துவர் ஒரே இரவில் பல முறை Laura இருந்த தளத்திற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது

Shafeeqஐ விசாரித்தபோது அவர் அப்படியே அந்த குற்றத்தை அந்தப் பெண் மீது திருப்பி விட்டார்.

தான் Lauraவை சோதிக்க சென்றபோது அவர் தன்னை பாலுறவுக்கு தூண்டியதாகவும் தன்னுடன் அவர் விரும்பிதான் பாலுறவு வைத்துக் கொண்டதாகவும் அவரது கணவரை பொறாமை கொள்ளச் செய்வதற்காக அவர் அவ்வாறு செய்ததாகவும் விடயத்தை அப்படியே திருப்பி விட்டார்.

தான் செய்தது மருத்துவ விதிமுறைகளின்படி தவறு என்பதை உணர்ந்து தான் வருந்தியதாகவும் கூட Shafeeq கூறியிருந்தார்.

மருத்துவ கவுன்சில் Shafeeqஇன் மருத்துவர் உரிமத்தை ரத்து செய்த நிலையில் வழக்கு தொடர்ந்து நடைபெற்றது

இதற்கிடையில் Dr. Shafeeq Sheikh, Lauraவின் மருத்துவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.அப்படியிருக்கும் நிலையில் அவர் Lauraவை பார்க்க அத்தனை முறை சென்றிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

வழக்கு மிக நீண்ட காலம் நடைபெற்ற நிலையில், நேற்றைய தினம் Texas நீதிபதி ஒருவர் Shafeeqஇன் சாட்சியத்தை நம்ப மறுத்து அவர் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார்.

Shafeeqகுக்கு என்ன தண்டனை என்பது இனிதான் முடிவு செய்யப்பட உள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + seventeen =

*