;
Athirady Tamil News

இரவு உடையில் நள்ளிரவில் லண்டனுக்கு பஸ் ஏறிய சிறுமிகள்: அடுத்து நடந்த சம்பவம்..!!

0

கனடாவில் இரண்டு சிறுமிகள் இரவு உடையில் வீட்டுக்கு தெரியாமல் கையில் ஒரு மேப்புடன் பஸ் ஏறினர்.

10, 12 வயதுடைய அந்த சிறுமிகள் கையில் இருந்த, கையால் வரையப்பட்ட வரைபடத்தில் லண்டனுக்கு செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

நள்ளிரவில் பஸ்ஸில் அவர்கள் ஏறியதைக் கண்ட பஸ் டிரைவர் மெதுவாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த Metro Vancouver போக்குவரத்து பொலிசார் அந்த சிறுமிகளை விசாரித்தபோது த்ரில்லுக்காக ஊர் சுற்ற அவர்கள் முடிவு செய்தது தெரிய வந்ததோடு அவர்கள் மேப்பில் குறிப்பிட்டிருந்தது இங்கிலாந்திலுள்ள லண்டன் அல்ல, அது கனடாவின் பிரபல லண்டன் மருந்து கடை என்பது தெரிய வந்தது.

ஆனால் அவர்கள் எதற்காக மருந்து கடைக்கு போக முடிவு செய்தார்கள் என்பது தெரியவில்லை.

சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படும் நிகழ்வுகள் பெருகிப் போன கால கட்டத்தில் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

நல்ல வேளையாக அந்த பஸ் டிரைவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததால் அந்த சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + five =

*