;
Athirady Tamil News

சுற்றுலா சென்ற இடத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய பிரித்தானியர்கள்..!!

0

ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் மழையினால் பெருக்கெடுத்து ஓடும் நீரால் கடற்கரைகளிலிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

திடீரென கொட்டிய மழையால் தெருக்களில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. Charlie Brown என்பவர் எடுத்துள்ள ஒரு வீடியோவில் மலையிலிருந்து தண்ணீர் ஓடி வருவதையும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடம் தேடி செல்வதையும் காணலாம்.

ஓடும் தண்ணீரின் வேகம் மிகவும் அதிகமாக இருப்பதால், தன்னால் சரியாக நடக்க இயலாமல், தன்னுடைய ஒரு ஷூ அடித்துக் கொண்டு போய் விட்டதால் ஒற்றைக் கால் செருப்போடு அலைவதாகவும் தெரிவிக்கிறார் Charlie.

Nottinghamஐச் சேர்ந்த Charlie, வெறும் 30 நிமிட மழைக்கே இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு விட்டதாகத் தெரிவிக்கிறார்.

பொதுவாக Benidormஇல் இப்படிப்பட்ட தட்பவெப்பம் இருக்காது, இம்முறை எல்லாமே வித்தியாசமாக உள்ளது என்கிறார் அவர்.

ஆகஸ்டு மாதத்தில் வெயில் கொளுத்தும், ஆனால் இன்று காலையில் உறைய வைக்கும் அளவிற்கு குளிராக இருந்தது என்கிறார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*