;
Athirady Tamil News

கண்ணிமைக்கும் நேரத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரை காப்பாற்றிய பொலிஸ்! வெளியான திக் திக் வீடியோ..!!

0

அமெரிக்காவில் தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிசார் காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முடிவு செய்துள்ளார்.

இதனால் அவர் அங்கிருக்கும் பாலம் ஒன்றில் ஏறி நின்ற நிலையில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தற்கொலைக்கு முயன்ற நபரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்

ஆனால் அவர் நான் தற்கொலை செய்து கொள்வது உறுதி என்று கூறி, குதிக்க முயற்சி செய்த போது, அங்கிருந்த பொலிசார் சாதுர்யமாக செயல்பட்டு அவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

அதன் பின் அங்கிருந்த மற்றொரு பொலிசாரும் அந்த நபரை காப்பாற்றினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை, அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + eight =

*