;
Athirady Tamil News

இலங்கை பல்கலைக்கழகங்களில் உள்ள மிகப்பெரிய அரங்கம் இம்மாதம் திறப்பு..!!

0

இலங்கை பல்கலைக்கழகங்களில் உள்ள மிகப்பெரிய அரங்கமான ருஹுன பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் ஞாபகார்த்த அரங்கம் இம்மாதம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை உயர் கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அரசானது குறித்த அரங்கத்தை தயாரிப்பதற்காக 265 மில்லியன் ரூபா தொகையை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டமானது இரு நாடுகளுக்கும் இடையிலான உயர் கல்வியை வளர்ச்சியடை செய்வதற்கான ஒரு பகுதியாகும்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிட்டது.

இதனையடுத்து அரங்கத்தின் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லிங்க் இஞ்சினியரின் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே சின்ஹா ​​அடிக்கல் நட்டு வைத்து 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரங்கத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமானது.

சுமார் 3000 சதுர மீட்டர் பரப்பளவில், அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய மிகப்பெரிய திரையரங்கு ஒன்றுடனும் 1500 ஆசனங்களுடனும், ருஹுன பல்கலைக்கழகத்தின் தனித்தன்மையான கட்டிடக்கலை மாதிரியைக் கொண்டு ரவீந்திரநாத் தாகூர் ஞாபகர்த்த அரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இம்மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*