;
Athirady Tamil News

அருகம்பை பகுதியில் நடக்கும் கலாசார சீரழிவுகள்..!!

0

அம்பாறை மாவட்டத்தில் உலக சுற்றுலாவிற்கு பிரசித்த பெற்ற இடமாக விளங்கும் அருகம்பை பகுதியில் இடம்பெற்றுவரும் பாரிய கலாச்சார சீரழிவு தகவல் கிடைத்துள்ளது.

இங்கு சர்வதேச அதாவது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களே அதிகம்.

ஆகையினால் அங்கு பயன்படுத்தப்படுகின்ற அல்லது வினோதத்திற்கு உட்படுகின்ற நடவடிக்கைகள் எங்களது கலாசாரங்களை மீறியது மாத்திரமின்றி மனித உயிரை விரைவில் காவு கொள்ளும் பல விடயங்களும் காணப்படுகின்றன.

இதற்கமைய அருகம்பை கடற்பரப்பின் பல்வேறு பகுதிகளில் அலைச்சறுக்கு விளையாட்டு போட்டிகள் இடம்பெறுகின்றன.

இதில் பங்கேற்பதற்கு வெளிநாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்வதோடு எமது நாட்டின் பிரஜைகள் பலர் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர்.

இதன்போது நடைபெறும் அல்லது மறைமுகமாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ஆராய்ந்த தகவல்கள் இதோ..

காலை 9.30 மணி முதல் ஆரம்பமாகும் அலைச்சறுக்கு போட்டிகள் மாலையில் சுமார் 6 மணிவரை இடம்பெறும்

அதன்பின்னரே இவ்வாறான கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுகின்றது அங்கு.

சூரியன் மறைந்த பின்னர் சிலர் வெளிநாட்டு கலாசாரங்களிலான ஆடைகளை அணிந்தவாறு கடற்கரைக்கு வருகை தருகின்றனர்…. பீச் பார்ட்டி எனப்படும் அந்த களியாட்ட நிகழ்வு அப்போதே ஆரம்பமாகின்றது.

இளைஞர் யுவதிகள் பலர் பங்கேற்க தயாரான நிலையில், அரை போதையில் தள்ளாடியவாறு நடனத்தில் பங்கேற்கின்றனர்.

இலங்கையில் இதுவரை அறிமுகம் செய்யபடாத பல பெயர்களை கொண்ட போதைப்பொருள்களை அரைபோதையில் காணப்படும் இளைஞர் யுவதிகளுக்கு விற்பனை செய்ய ஒரு குழு இயங்குகின்றது.

இதன்போது கிடைத்த சில திடுக்கிடும் வகையிலான போதை பொருட்களின் பெயர்கள் மற்றும் அதன் கட்டணங்களை கீழே தருகின்றோம்.

அயிஸ் என்ற பெயர் கொண்ட போதைப்பொருளே இங்கு அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன.

அந்த போதை பொருள் 1 கிராமின் விலை 60 ஆயிரம் ரூபாவாகும். அதில் சிறுதுளி பாவிப்பதற்கு 15 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படுகின்றது.

அது மாத்திரமின்றி இதுவரை கேள்விப்பட்டிராத N D M A என பெயர் கொண்ட இந்த போதை பொருள் ஒரு கிராம் 19 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

DMT ஒரு கிராம் 28 ஆயிரம் ரூபாய், ரோஸ் நிற குளிசை 12 ஆயிரம் ரூபாய், குரங்கு முகம் பதித்துள்ள நீல நிற குளிசை 15 ஆயிரம் ரூபாய், கஞ்சா மலர் அடையாளம் பதித்துள்ள குளிசை 19 ஆயிரம், ஹெப்பி வோட்டர் (மகிழ் நீர்) ஒரு சிறிய குப்பியின் விலை 35 ஆயிரம் ரூபாய், கெலிபோர்னியா சன்ஷைன் சிரிய குப்பி 38 ஆயிரம் ரூபாய், ஹெப்பி வோட்டர் மற்றும் சன் ஷைன் ஆகிய போதை பொருளின் ஒரு துளி சுவைக்கு 12 ஆயிரம் ரூபாய், கேரள கஞ்சா ஐந்து கிராம் ஐந்தாயிரம் ரூபாய், நம்நாட்டு கஞ்சா 50 கிராம் 12 ஆயிரம் ரூபாய். கொக்கைன் ஒரு கிராம் 13 ஆயிரம் ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

குறித்த போதை பொருள் பயன்படுத்தினால் சில நாட்களுக்கு போதையிலிருந்து வெளிப்படுவது கடினம் எனவும், சிலர் போதையிலேயே மரணிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த பொருள்கள் இலகுவாக அருகம்மை கடற்கரை பீச் வாடிகளில் கிடைப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த போதை விற்பனை செய்யப்படுவதனால் அப்பகுதியில் வசிப்பவர்களின் குடும்பங்களிலுள்ள பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளைய சமுதாயம் வெகுவாக போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அது மாத்திரமின்றி அதனை பெற்றுக்கொள்ள கொலை மற்றும் கொள்ளைச்சம்பவங்களிலும் இளைஞர் யுவதிகள் ஈடுபடுவதோடு போதையில் வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தும் நடவடிக்கைகளிலும் இளைய சமுதாயத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அது மாத்திரமின்றி போதையான பெண்களை இளைஞர்கள் கூட்டு பாலியலுக்கு உட்படுத்தியும் வருகின்றனர்.
மேலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெண்களுடன் உடலுறவு கொள்வதனால் எச் ஐ வி எனப்படும் சமூக நோய்க்கும் உட்படுகின்றனர்.

இதனுடன் உயர் அதிகாரிகளை அழைத்து மதுவும் மாதவும் கப்பமாக வழங்கும் செயற்பாடுகளும் சாதாரணமாக இடம்பெறுகிறது.

இந்த கலாச்சாரம் நீடிப்பதனால் அம்பாறை மாவட்டம் வெகுவிரைவில் சீரழிந்த ஒரு மாவட்டமாக உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 15 =

*