;
Athirady Tamil News

வவுனியாவில் இரண்டு கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது..!! (படங்கள்)

0

வவுனியாவில் இரண்டு கிலேகிராம் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி வில்வ ஆராட்சி தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர்

வவுனியாவிலிருந்து கெப்பிற்றிகொல்லா நோக்கி புறப்பட தயாராகவிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை சோதனையிட்ட போதே கேரள கஞ்சாவுடன் 28 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கெப்பிற்றி கொல்லாவ பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் என தெரிவித்த வவுனியா பொலிசார் சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 11 =

*