;
Athirady Tamil News

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் மக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

வவுனியாவில் வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் மக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (21) நெடுங்கேணியில் நடைபெற்றது.

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுமடு வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தை தொல்பொருள் திணைக்களம் மக்கள் வழிபாட்டுக்கு தடை விதித்து ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்து வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டிலும், தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஒருங்கிணைப்பிலும் இக்கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்

தெற்கின் சுதந்திரம் வடக்கில் இல்லை, அன்று இராணுவ ஆக்கிரமிப்பு இன்று தொல்லியல் ஆக்கிரமிப்பா, மக்கள் பிரதிநிதிகளே ஏன் இந்த மௌனம்?பதவி சுகமா காரணம்!, வழிபாட்டு சுதந்திரத்தில் வாலாட்டாதே இந்துக்களின் வழிபாட்டில் இடையூறு செய்யாதே, விகாரை அமைக்கவா வெடுக்குநாறி மலை போன்ற பதாதைகளை தாங்கியவாறே கோசமெழுப்பினர்.

அத்துடன் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளர் க.பரந்தாமனிடம் ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு மகஜர் ஒன்றும் கையளிக்கப்ட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோதாரலிங்கம், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா மற்றும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன், வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 11 =

*