;
Athirady Tamil News

புத்தள கடற்பரப்பில் கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கை..!!

0

புத்தளம் – முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, உடப்பு முதல் தொடுவாய் வரையிலான கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் உள்ள கழிவுப் பொருட்களை அகற்றும் நடவடிக்கை (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 10 கிலோ மீற்றர் தூரமுடைய கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் இந்தியாவில், தயாரிக்கப்பட்ட அதிகளிலான கழிவுப் பொருட்களுடன் பொலித்தீன் பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளது.

கரையொதூங்கிய இந்த கழிவுப் பொருட்களில் ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள் காலாவதியான மருந்து பொருட்கள், கண்ணாடி போதத்தல்கள், பொலிதீன்கள், ஊசி வகைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் காணப்பட்டன.

இருப்பினும் அவை அகற்றப்பட நிலையில், இன்று காலை முதல் மாலை வரை புத்தளம் மாவட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை உடப்பு பொலிஸ் சின்னப்பாடு கடற்படை மற்றும் கிராமிய சங்கங்கள் இணைந்து துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*