;
Athirady Tamil News

யாழ் போதனா வைத்தியசாலையில் வெளியேற்றப்படும் கழிவுநீர் பண்ணை கடலில்..!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை உரிய நியமங்களுக்கமைய சுத்திகரிக்காமல் பண்ணைப் பகுதி கடலில் சேர்ப்பதாக கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற யாழ். மாநகர சபையின் அமர்வில் மாநகர சபை உறுப்பினர் எம். அருள்குமரன் முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த. சத்தியமூர்த்தி உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்.

இன்று புதன்கிழமை காலை குறிப்பிட்ட யாழ். மாநகர சபை உறுப்பினரையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தீடீர் விஜயமொன்றினை மேற்கொண்ட யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் கழிவு நீர் சுத்திகரிப்பு முறைகள் குற்றஞ்சாட்டப்பட்டது போலவே நியமங்களுக்கமைவாக சுத்திகரிப்புப் பொறிமுறை இடம்பெறவில்லை என்பதை நேரடியாக உறுதிப்படுத்தியதோடு, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*