;
Athirady Tamil News

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை யாழ் ஜின்னா மைதானத்தில் நடைபெற்றது..!! (படங்கள்)

0

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று(22) யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டதுடன் தொடர்ந்து மௌலவி முஜாஹீத் மார்க்க பிரசங்கத்தை நடத்தினார்.

இப்பெருநாள் தினமானது இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

வசதிபடைத்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்கக் கடமைகளில் ஈடுபடுவார்கள்.

உலகின் சகல பாகங்களில் இருந்தும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா மாநகரில் மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளை கடந்து இலட்சக் கணக்ககானவர்கள் ஒன்றுகூடி ஹஜ் வழிபாடுகளில் ஈடுபடுவது இந்த தினத்தின் விசேட அம்சமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 9 =

*