;
Athirady Tamil News

பெண்கள் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது..!!

0

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வௌ்ளவத்தை, ஜா-எல மற்றும் கொம்பனித்தெரு ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளவத்தை பிரதேச குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் 41 வயதுடைய நபர் ஒருவரை 25 கிராம் 180 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, ஜா-எல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது, 25 மற்றும் 40 வயதுடைய இரு பெண்களும் 38 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 17 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வாழைத்தோட்டம் பகுதியில் 3 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயினுடன் 23 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, கோட்டை மற்றும் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*