;
Athirady Tamil News

கருணாநிதி சமாதியை நோக்கிய பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் – மு.க அழகிரி..!!

0

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின்னர், அவரது மகனும் முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க அழகிரி தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். வரும் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது, “தற்போது திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை. நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை தெரிவிப்பேன். செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் கருணாநிதி சமாதியை நோக்கி செல்லும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். பேரணிக்கு பின்னர் எனது முடிவை தெரிவிப்பேன்” என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*