;
Athirady Tamil News

ஆம் ஆத்மியின் முக்கிய முகமான ஆஷிஷ் கேதன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு..!!

0

டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமான ஆஷிஷ் கேதன் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். பத்திரிகையாளராக இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்றிய அவர் அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த ஓராண்டாகவே அரசியலில் இருந்து விலக நினைத்தேன். குடும்பம் மற்றும் நண்பர்கள் கருத்தை கேட்ட பின்னர் தற்போது கட்சியிலிருந்து விலகுகிறேன் என கேதன் கூறியுள்ளார். சமீபத்தில், மற்றொரு முக்கிய தலைவரான அசுதோஸ் விலகிய நிலையில், கேதனும் விலகியுள்ளது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 8 =

*