;
Athirady Tamil News

95 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் பெண்கள் நால்வர் கைது..!!

0

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்க நாணயங்களை எடுத்து வந்த இலங்கை பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (22) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்கள் சிங்கப்பூரில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்களிடம் இருந்து 95 இலட்சத்து 71 இரண்டாயிரத்து 320 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

1 கிலோ 595 கிராம் நிறையுடைய தங்க நகைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + fourteen =

*