;
Athirady Tamil News

இயற்கைக்காக பூமியில் இருந்து தோன்றிய குழந்தைகளாக நினைப்போம்..!! (வீடியோ)

0

இலங்கை இராணுவம், நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு ஆகியவற்றுடன் மனுசத் தெரண ஒன்றிணைந்து அதிவேக நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் மரங்களை நட்டு அவற்றை பராமரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை இன்று (23) காலை 8.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

´துருலிய வெனுவென் அபி´ என்ற குறித்த வேலைத்திட்டம் இயற்கைக்காக பூமியில் இருந்து தோன்றிய குழந்தைகளாக நினைப்போம் என்ற கருப்பொருளில் நடைபெற்றது.

அதுருகிரிய ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்கு உட்பிரவேசிக்கும் பகுதியில் இந்த தேசிய நிகழ்வு இராணுவ தளபதி லுதினன் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தலைமையில் ஆரம்பமானது.

இதற்கமைவாக கொட்டாவ, வெலிபெண்ண, கஹதுடுவ, தொடங்கொட மற்றும் கொடகம ஆகிய பகுதிகளிலும் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது.

கடவத்தை முதல் மாத்தறை வரையான 154 கிலோ மீற்றர் தூரமான அதிவேக நெடுஞ்சாலையில் இரு பக்கங்களிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 1 இலட்சத்து 16000 ஆயிரத்திற்கும் அதிகாமாக மரங்கள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க ஊடக வலையமைப்பு என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்கு வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக தெரண ஊடக வலையமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி மாதவ மடவல தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 5 =

*