;
Athirady Tamil News

கிளிநொச்சியின் புதிய சந்தைக்கு 200 மில்லியன் நிதி விடுவிப்பு – பிரதேச சபை தவிசாளர் எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை – அரச அதிபர்..!!

0

கிளிநொச்சியின் புதிய சந்தைக்கு 200 மில்லியன் நிதி விடுவிப்பு – பிரதேச சபை தவிசாளர்
எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை – அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய சந்தை தொகுதி அமைப்பதற்கு முதற்கட்டமாக இருநூறு மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். ஆனால் சந்தை தொகுதி அமைப்பதற்கு இதுவரை எவ்வித நிதியும் விடுவிக்கப்படவில்லை என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய மாடி சந்தைக் கட்டட தொகுதி அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 767 மில்லியன் ரூபாவில் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு முதற்கட்டமாக இவ்வருடம் 200 மில்லியன் ரூபா நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் சந்தை வர்த்தகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை மாலை நான்கு முப்பது மணிக்கு கரைச்சி பிரதேச சபையில் சந்தை வர்த்தகர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் அங்கு தவிசாளர் மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தின் சேவை சந்தைக்கு மூன்று மாடிகளை கொண்ட புதிய சந்தை கட்டடிடத் தொகுதி அமைப்பதற்கு திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு அதனை அமைப்பதற்கு இவ்வருடம் இருநூறு மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் மூன்று கட்டங்களாக நிதிவிடுவிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை தொடர்பு கொண்டு வினவிய போது புதிய சந்தை கட்டடம் அமைப்பதற்கான எவ்வித நிதியும் இதுவரை விடுவிக்கப்படவில்லை, ஆனால் அற்கான அமைச்சரவை அனுமதி மாத்திரமே கிடைத்துள்ளது எனத் தெரிவித்த அவர் குறித்த சந்தைக்கான நிதி பெரும் நிதி என்பதனால் அவை மாவட்டச் செயலகத்திற்கு வழங்க்கடாது எனவும் அமைச்சுக்கே வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − two =

*