;
Athirady Tamil News

சித்தூரில் செல்போன் கேட்டு கல்லூரி மாணவி தற்கொலை..!!

0

சித்தூர் அடுத்த பழைய பிரசாந்த்நகரை சேர்ந்தவர் மகபூப்பாஷா, லாரி டிரைவர். இவருடைய மனைவி அலிஷா. அவர்களுக்கு இரு மகள்கள் உண்டு. மூத்த மகள் ரெட்டிசமீரா (வயது 19). இவர், சித்தூர் அரசு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மகபூப்பாஷா லாரி ஓட்டிக்கொண்டு கொல்கத்தா சென்று விட்டார்.

ரெட்டிசமீரா தனது தந்தைக்கு போன் செய்து, தனக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கித் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு மகபூப்பாஷா, படிக்கும் வயதில் மொபைல் போன் வாங்கித் தர மாட்டேன், எனக் கூறி விட்டார். இதனால் மனமுடைந்த ரெட்டிசமீரா இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தார்.

அவருடைய தாயார் ஆறுதல் கூறியும் கேட்கவில்லை. இரவு உணவும் சாப்பிடவில்லை. அவரின் தாயார் அறையை திறந்து பார்த்தபோது மின்விசிறியில் ரெட்டிசமீரா தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார்.

இதுகுறித்து சித்தூர்-2 போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − five =

*