அக்கா மகளுக்கு பணத்தாசை காட்டி கள்ளக்காதலியாக்கிய நகை வியாபாரி..!!

நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 48).
ராஜ்குமாரும், ஈரோடு மாவட்டம் பவானி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த சிவசெல்வி என்ற பெண்ணும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுசீந்திரத்தை அடுத்த மருங்கூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.
அக்கம் பக்கத்தினரிடம் நகை வியாபாரி என்று ராஜ்குமார் அறிமுகப்படுத்திக் கொண்டார். தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏலத்திற்கு வரும் நகைகளை குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்கலாம் என்றும் இதன் மூலம் கூடுதல் லாபம் சம்பாதிக்கலாம் என்றும் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். இதனை நம்பி பலரும் அவருக்கு பணம் கொடுத்தனர். ஆரம்பத்தில் பணம் கொடுத்தவர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுத்த ராஜ்குமார், அதன் பிறகு வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தார். ரூ.1.50 கோடி வரை பலரிடமும் பணம் வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இதுபற்றி வாசன் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ராஜ்குமாரும், சிவசெல்வியும், மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு ரெயிலில் சென்றது தெரிய வந்தது.
குமரி மாவட்ட போலீசார், நாக்பூர் போலீசாரை தொடர்பு கொண்டு நாக்பூர் ரெயில் நிலையத்தில் இருவரையும் பிடித்தனர். போலீஸ் பிடியில் சிக்கியதும் இருவரும் சயனைடு தின்று தற்கொலை செய்தனர்.
இதையடுத்து சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை போலீசார் நாக்பூர் சென்றனர். அங்கு அவர்கள் ராஜ்குமார், சிவசெல்வி தற்கொலை செய்து கொண்டது குறித்து நாக்பூர் போலீசாரிடம் கேட்டறிந்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவலையும் தனிப்படை போலீசார் சேகரித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இன்று ஏற்காடு பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் நாமக்கல், ஈரோடு பகுதியிலும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், ராஜ்குமாருடன் தற்கொலை செய்த சிவசெல்வி, அவரது அக்கா மகள் என தெரிய வந்தது. சிவசெல்விக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ராஜ்குமார் சிவசெல்வி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது தன்னுடன் வந்தால் அதிக பணம் தருவதாக ஆசை காட்டினார். இதில் மயங்கிய சிவசெல்வி குடும்பத்தை பிரிந்து ராஜ்குமாருடன் குமரி மாவட்டம் வந்தார்.
மருங்கூரில் கணவன்- மனைவி போல் தங்கிய ராஜ்குமாரும், சிவசெல்வியும் மோசடி பணத்தில் உல்லாசமாக சுற்றி வந்தனர். ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு காரில் சென்று வந்தனர்.
இதற்காக தனியாக கார் ஒன்றும் வாங்கி உள்ளனர். அந்த காரை மருங்கூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஓட்டி வந்தார்.
போலீஸ் விசாரணையில் வெளியான இந்த தகவல் ராஜ்குமாரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களில் ஒருவர் ராஜ்குமார் பயன்படுத்திய காரை எடுத்துக் கொண்டார்.
இது போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் காரை ஓட்டிய டிரைவரை பிடித்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே ராஜ்குமார் மீது மேலும் பலர் நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் இன்றும் புகார் மனு கொடுத்தனர். அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரும் பணம் கொடுத்து ஏமாந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ராஜ்குமார் ஆன்லைன் மூலமும் இது போன்ற மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சைபர் கிரைம் போலீசார் மூலமும் இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.