;
Athirady Tamil News

மாஸ்கோவில் தற்கொலைப்படை தாக்குதலில் இரண்டு விமானங்கள் வெடித்து 89 பயணிகள் பலி – 24-8-2004..!!

0

ரஷ்யாவின் மாஸ்கோவில் கடந்த 2004ம் ஆண்டு உள்நாட்டு விமானங்களை குறிவைத்து தீவிரவாதிகள் அடுத்தடுத்து தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர்.

ஆகஸ்ட் 24-ம் தேதி வோல்கா ஏவியஸ் எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 10.30 மணிக்கு டோமோதேவ்டோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. சுமார் 11 மணியளவில் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் மாஸ்கோவில் இருந்து 180 கி.மீ. தொலைவில் வெடித்துச்சிதறி கீழே விழுந்துள்ளது. இதில் 34 பயணிகள், 9 விமான ஊழியர்கள் என விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர்.

இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில், மற்றொரு தாக்குதலும் நடத்தப்பட்டது. 38 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் 24-ம் தேதி இரவு 9.35-க்கு டோமோதேவ்டோ விமான நிலையத்தில் சிபரியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. இரவு 11 மணிக்கு ரேடார் திரையில் இருந்து அதன் இயக்கம் மறைந்தது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் வெடித்து கீழே விழுந்தது. விமானத்தில் இருந்த அனைவரும் இறந்தனர். மறுநாள் விமானத்தின் சிதறிய பாகங்களை பார்த்துதான் அனைவரும் இறந்ததை உறுதி செய்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த கோர தாக்குதல் தொடர்பான வழக்கில், போலீஸ் கேப்டன் மிக்கைல் அர்த்தமானோவுக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பணியின்போது அலட்சியமாக இருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டது.

இதேபோல் ஆகஸ்ட் 24-ம் தேதியில் நினைவில் நிற்கும் முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1349 – ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் கொள்ளை நோயைக் காரணம் காட்டி 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1690 – கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது.

1814 – பிரிட்டிஷ் படையினர் வாஷிங்டன், டி.சி.யை முற்றுகையிட்டு வெள்ளை மாளிகை உட்படப் பல கட்டிடங்களுக்குத் தீ வைத்தனர்.

1821 – ஸ்பெயினுடன் மெக்சிகோ நடத்திய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1912 – அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1931 – பிரான்சும் சோவியத் ஒன்றியமும் தமக்கிடையே போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.

1936 – ஆஸ்திரேலிய அண்டார்க்ட்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

1939 – நாசி-சோவியத் உடன்பாடு ஹிட்லருக்கும் ஜோசப் ஸ்டாலினுக்கும் இடையில் எட்டப்பட்டது.

1954 – அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது

1991 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மிக்கைல் கார்ப்பசேவ் விலகினார்.

1972 – நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை இறந்த நாள்.

1954 – பிரேசில் அதிபர் கெட்டூலியோ வார்காஸ் தற்கொலை செய்து கொண்டார்.

1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரைன் பிரிந்தது.

1992 – மக்கள் சீனக் குடியரசுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன.

1929 – பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரபாத் பிறந்த நாள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − fifteen =

*