;
Athirady Tamil News

ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் பலர் கைது..!!

0

டெமடோல் எனப்படும் 1300 போதை மாத்திரைகளை மோட்டார் சைக்கிள் இரண்டில் எடுத்துச்சென்ற சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது மன்னார் நகரத்தில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இருவரும் மன்னார் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஶ்ரீபுர, ஹெலவெவ பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஹெரோயின் 41 கிராம் 600 மில்லிகிராமுடன் இரத்மலானை பகுதியில் வைத்து 29 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பானதுறை, வேரவத்த பகுதியில் 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*