;
Athirady Tamil News

3 வருட காதல்- தாலி கட்டும் நேரத்தில் காதலியை விட்டு ஓடிய காதலன்..!!

0

திருப்பூர் காங்கயம் அருகே உள்ளது பெருமாள்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுமத்ரா (வயது 25). சாமுண்டிபுரத்தில் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (27). இவரும் அதே கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே காதலாக மாறியது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததும் அவர்களும் காதலை ஏற்றுக்கொண்டனர். கடந்த மாதம் செந்தில்குமாருக்கும், சுமத்ராவுக்கும் முறைப்படி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தனர். பத்திரிக்கையை உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து அழைப்பு விடுத்தனர்.

திருமணம் ஏற்பாடுகள் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நேற்று முன்தினம் உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்துடன் மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர். மணமேடை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மண்டபமே களை கட்டியது. நேற்று (23-ந்தேதி) காலை மணமகள் அலங்காரத்தில் சுமத்ரா மணமேடைக்கு வர தயாரானார்.

இந்நிலையில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. இது குறித்து மாப்பிள்ளையின் வீட்டாருக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது மாப்பிள்ளையை காணவில்லை. நாங்களும் தேடி வருகிறோம் என்று கூறினர். இதைகேட்ட திருமண மண்டபமே அதிர்ச்சியடைந்தது. மணப்பெண் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

3 ஆண்டுகளாக காதலித்து விட்டு மணமேடைக்கு வராமல் மாயமான செந்தில்குமார் மீது மணப்பெண் சுமத்ரா மற்றும் அவரது பெற்றோர் ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தனர். அதில் செந்தில்குமாரை அவர்களது பெற்றோர் மறைத்து வைத்துள்ளதாகவும், அவரை மீட்டுத்தரும்படியும் கேட்டனர். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*