;
Athirady Tamil News

200 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்: மூவர் படுகாயம்..!!

0

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியின் நாவலப்பிட்டி கொன்தென்னாவ பகுதியில் நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த வேன் ஒன்று சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + nine =

*