;
Athirady Tamil News

தாயை கல்லால் தாக்கிய 11 வயது மகனுக்கு பினை..!!

0

பொகவந்தலாவ செல்வகந்த தோட்ட பகுதியில் தனது தாயை கல்லால் தாக்கிய 11 வயது சிறுவனுக்கு பொகவந்தலாவ பொலிஸாரால் பிணை வழங்கபட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று (24) மாலை வேளையில் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 11 வயது சிறுவனுக்கு அவனுடைய தாய் மிளகாய் தூள் எறிந்தமையின் காரணமாக மகன் அத்திரமடைந்து தனது தாயை கல்லால் தாக்கியதாக பொலிஸாருக்க வழங்கபட்ட வாக்குமுலத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான சிறுவனின் தாய் பொகவந்தலாவ வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் அயல் வீடுகளில் வேலை செய்து தனது தாய்க்கும் தங்கைகும் உணவு தேடி கொண்டு வந்து கொடுப்பதாகவும் தனது தாயின் வலது கையில் நரம்பு முறிவு ஏற்பட்டுள்ளமையால் தொழில் புரிய முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.

சிறுவனின் தந்தை கொழும்பில் பணி புரிந்து வருவதாகவும் இரண்டு அல்லது ஒரு வருடங்களுக்கு ஒரு முறை வந்து தனது பிள்ளைகளை பார்த்துவிட்டு செல்வதாகவும் குறித்த தாய் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுவனின் வீட்டில் சமைத்து உண்பதற்கான வசதிகள் கூட இல்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − seven =

*