;
Athirady Tamil News

வுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு தடை விதித்த மனோவின் பாதுகாப்பு பிரிவினர்..!!

0

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பண்டாரவன்னியன் நினைவுதினத்தில் கலந்துகொண்ட மனோகணேசனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு இடையூறை ஏற்படுத்தியிருந்தனர்.

பண்டாரவன்னியனின் 215 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு வவுனியா நகரமண்டபத்தில் இடம்பெற்றபோது தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும் திடீரென கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது பொலிஸாரும் மோப்ப நாய்களை கொண்டு பரிசோதனை நடத்தியதன் பின்னர் அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் என்றும் இல்லாத வகையில் வாயில்களை மறித்து அமைச்சருக்கான பாதுகாப்பை வழங்கி வந்திருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர்கள் பார்வையாளர்களுக்கு இடையூறு ஏற்படாதவகையில் ஓரமாக நின்று பின்னர் மண்டபத்திற்கு முற்பட்டபோது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடை விதித்தனர். இதனால் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்படவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும் ஊடகவியலாளர்கள் நிகழ்விற்கு குழப்பம் ஏற்படாதவகையில் தமது கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − three =

*