;
Athirady Tamil News

வன்னி மன்னன் பண்டாரவன்னியன் 215 வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு..!! (படங்கள்)

0

வன்னி மன்னன் பண்டார வன்னியன் முல்லைக்கோட்டையை தகர்த்த 215 ஆண்டு நினைவு நாள் இன்று (25) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வன்னி மண்ணின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை அன்னியர்களிடம் இருந்து மீட்ட 215 ஆவது ஆண்டு நிறைவுநாள் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் அன்னியர்களுடன் போரிட்டபோது முல்லைத்தீவு கோட்டையை கற்பற்றுவதற்காக பலமுனை போரை தொடுத்து இன்றைய நாள் அக் கோட்டையை கைப்பற்றியிருந்தார்.

இந் நிலையில் இந் நினைவு தினத்தினை வவுனியா நகரசபையும் பண்டாரவன்னியன் விழாக்குழுவும் இணைந்து வருடாந்தம் அனுஸ்டித்து வரும் நிலையில் இன்று காலை வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் தலைமையில் மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து வவுனியா நகரசபை மண்டபத்தில் சிறப்புரைகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா, ப. சத்தியலிங்கம், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்துகொண்ருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*