;
Athirady Tamil News

2 ஆப்பிள் ஜூஸு.. கையில இல்லை காசு.. இந்தா பிடி கத்தி.. ஒரு கலகல ரவுடி கதை..!! (வீடியோ & படங்கள்)

0

வர வர ரவுடிகள் எல்லாம் ரொம்ப காமெடி பண்றாங்க… ‘முடியலை’ என்று மக்கள் அலுத்துக் கொள்ளும் அளவுக்கு ரவுடித்தனம் தடம் மாறி வருகிறது. சமீபத்தில் ஒரு ரவுடி பாக்ஸிங் ஸ்டைலில் கடைக்காரரை கும்மாங்குத்து விட்டு பின்னர் போலீஸில் சரணடைந்தார். இது இன்னொரு ரவுடியின் காமெடிக் கதை. திருவான்மியூர் சீவார்டு சாலையில் ஒரு ஜூஸ் கடை உள்ளது.

இந்த கடைக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு ரவுடி வந்தார். கடைக்குள் நுழையும்போதே “ஃபுல்” ஆக தள்ளாடிதான் வந்தார். ஜூஸுக்கு பணம்? கடைக்குள் வந்ததும் ஆப்பிள் ஜூஸ் வேணும் என கேட்டு வாங்கி குடித்தார். குடித்து முடித்ததும் ரவுடியிடம் கடைக்காரர் காசு கேட்டார். ஆனால் ரவுடி என்கிட்ட காசு இல்லை, தர முடியாது என்று சொன்னார். ஆனால் கடைக்காரர் விடாமல் குடித்த ஜூஸூக்கு பணம் வேண்டும் என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி, தன்னிடமிருந்த கத்தியை எடுத்து கொண்டு கடைக்காரரை மிரட்டினார். பரவாயில்ல.. அப்பறமா தாங்க இப்போது கடைக்காரர் உஷாராகிவிட்டார். ‘பார்ட்டியோ போதையில் உள்ளது, பணத்தையும் வாங்க முடியாது, கையிலும் கத்தி உள்ளது’…

இவ்வளவையும் கவனித்த கடைக்காரர் சுதாரித்து கொண்டு, “பணம் எல்லாம் வேணாம். இருக்கும்போது அப்பறமா வந்து கொடுத்தால் போதும்” என்றார். அடமானமா வெச்சிக்கோ கடைக்காரர் இப்படி சொன்னதும் ரவுடிக்கு ஒருமாதிரியாகி விட்டது. ஏற்கனவே போதையில் இருந்த ரவுடிக்கு இப்போது கடைக்காரர் மீது திடீர் கரிசனமும், பாசமும் வந்துவிட்டது. அடடா கடைக்காரர் ரொம்ப “நல்லவரா” இருக்காரே என்று நினைத்த “ரவுடி சார்”.. “சரி… என் வீடு பக்கத்துலதான் இருக்கு. நான் பணம் தராமல் எங்கேயும் ஜூஸ் கிடைச்சது கிடையாது. நான் குடிச்ச ஒரு ஆப்பிள் ஜூஸுக்கான பணத்தை அப்பறமா தரேன்.

அதுவரைக்கும் என் கத்தியை அடமானமா வெச்சிக்கோ. பணத்தை கொடுத்துட்டு என் கத்தியை நான் மீட்டுக்கறேன்” என்றார். இன்னொரு ஜூஸ் கொண்டா “பட் இந்த டீலிங் நல்லாருக்கே” என்று நினைத்த கடைக்காரரும் ஒப்புக் கொண்டு கத்தியை வாங்கிக் கொண்டார். கடைக்காரர் கத்தியை வாங்கியதும், ரவுடிக்கு மீண்டும் தெனாவட்டு கூடிவிட்டது. இப்போது சத்தமாக “டேய்… இன்னொரு ஆப்பிள் ஜூஸ் கொண்டா” என்று மிரட்டும் தொணியில் கேட்டார். உடனே ஜூஸூம் வந்தது.

அதை வாங்கி குடித்துவிட்டு ரவுடி சென்றுவிட்டார். தேடப்படும் ஜூஸ் ரவுடி இப்போது 2 ஜூஸூக்கான பணம் அவர் கடைக்காரரிடம் தர வேண்டியுள்ளது. ரவுடி சென்றபின்னர், கடைக்காரர் அந்த கத்தியை கொண்டுபோய் திருவான்மியூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு, ரவுடி மீது ஒரு புகாரும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். ரவுடி கடைக்குள் நுழைந்து 2 ஜூஸ் குடிக்கிறவரைக்கும் எல்லா காட்சிகளும், அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாயின. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியும் உள்ளது. இந்த காட்சிகளை வைத்து “ஜூஸ் ரவுடி”யை போலீசார் தேடி வருகின்றனர். ம்ம்.. எப்பேர்ப்பட்ட “கபாலி”களை பார்த்த சென்னை பூமி இது.. இப்படி கபால்னு கவிழ்ந்து போன ரவுடிகளையும் பார்க்க வேண்டியிருக்கே!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*