;
Athirady Tamil News

கிளிவெட்டியில் 25 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு..!!

0

செமட்ட செவன” திட்டத்தின் கீழ் திருகோணமலை கிளிவெட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (25) இடம்பெற்றது.

இவ் வீட்டுத்திட்டம் அமைந்துள்ள இடத்திற்கு முத்துமாரியம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சினால் அமைக்கப்படும் 110 வது வீடமைப்பு திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹரூப், கே. துரைரட்ணசிங்கம், அப்துல்லா மஹரூப், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அருண சிறிசேன, மூதூர் பிரதேச செயலாளர் எம்.தாஹீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 8 =

*