;
Athirady Tamil News

கொம்பில் பற்றி எரியும் தீயுடன் சுற்றுலாப்பயணியை துவம்சம் செய்த காளை..!!

0

ஸ்பெயினில் நடந்த திருவிழா ஒன்றில் கொம்பில் பற்றி எரியும் தீயுடன் ஆவேசமாக வந்த காளை ஒன்று அதனிடம் சிக்கிய சுற்றுலாப்பயணியை துவம்சம் செய்யும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

திருவிழாவைக் காண வந்த இன்னொரு நபர் தனது மொபைலில் எடுத்த வீடியோவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.

சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அந்த காளையை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர்.

காளைச் சண்டையில் வீரர்கள் செய்வது போல் ஒருவர் ஒரு துணியைக் காட்டி காளையின் கவனத்தை திசை திருப்ப முயல்கிறார்

ஆனாலும் தொடர்ந்து அந்த நபரைக் காளை தூக்கி வீசி துவம்சம் செய்கிறது

45 வயதுடைய அந்த நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூளையில் இரத்தக் கட்டி உட்பட பலத்த காயங்களுடன் இருக்கும் அந்த நபர் சிகிச்சையால் முன்னேறி வருவதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + nineteen =

*