;
Athirady Tamil News

பச்சிளம் குழந்தையை புதரில் வீசிச் சென்ற இளம்பெண்: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

0

தெற்கு ஜேர்மனி நகரமான முனிச்சில் புதர் ஒன்றில் கேட்பாரற்றுக் கிடந்த குழந்தை தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அடுக்கடுக்காக பல உண்மைகள் வெளிவந்துள்ளன.

பவேரியாவின் தலைநகரமான முனிச்சில் ஒரு பெண் தனது நாயுடன் நடந்து செல்லும்போது ஒரும் பச்சிளம் குழந்தை புதர் ஒன்றில் கிடப்பதை பார்த்துள்ளார்.

உடனடியாக அவர் ஒரு குழந்தைகள் நல மருத்துவருக்கு தகவலளிக்க குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனையில் கொண்டு சென்று சோதித்தபோது அந்த குழந்தையின் உடல் வெப்பநிலை வெறும் 26 டிகிரி செல்ஷியஸ்தான் இருந்தது.மற்றபடி குழந்தையின் உடல்நிலை நல்லபடியாக உள்ளதாக பின்னர் பொலிசார் தெரிவித்தனர்.

குழந்தை பிறந்த உடனே அது புதரில் போடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்த பொலிசார் அதன் தொப்புள் கொடி கூட சரியாக துண்டிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகம் ஒன்றில் ஒரு பெண்ணை சந்தித்த அந்த பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவர் அந்த பெண்ணுடன் ஒரு நாள் இரவை உல்லாசமாக கழித்ததாகவும் அவளது வயிறு சற்று பெரியதாக இருந்ததாகவும் ஆனால் அவள் கர்ப்பமாக இருப்பாள் என தான் நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

காலையில் தனக்கு வயிறு வலிப்பதாகவும் தான் ஃப்ராங்பர்ட்டிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு செல்ல விரும்புவதாகவும் தன்னை ரயில் நிலையத்தில் கொண்டு விட்டு விடுமாறும் அந்த பெண் கேட்டுள்ளார்.

வீட்டை சுத்தம் செய்துவிட்டு அவளை கொண்டு விடலாம் என்று அவர் வந்து பார்த்தபோது அந்த பெண் மாயமாகியிருந்தாள்.

பின்னர் மீண்டும் சற்று நேரத்திற்குப்பின் அவளை தான் சந்தித்தபோது அவள் வயிறு சாதாரணமாக இருந்ததை தான் கவனித்ததாகவும் அவளை ரயில் நிலையத்தில் கொண்டு விட்டதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

பின்னர் அவருக்கு போன் செய்த அந்த பெண் தான் ஃப்ராங்பர்ட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறாள்.

இந்த தகவல்களை வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் ஃப்ராங்பர்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு 27 வயது இளம்பெண்ணைக் கண்டு பிடித்தனர். நடந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் அவளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + fourteen =

*