;
Athirady Tamil News

பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி: 18 மாதங்களுக்கு பின் பொலிஸாருக்கு கொடுத்த அதிர்ச்சி…!!

0

பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி அடையாளம் தெரியாத உருவில், கடந்த 18 மாதங்களாக தெருக்களில் சுற்றித்திரிந்ததை கேள்விப்பட்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இங்கிலாந்தின் Aintree பகுதியில் கடந்த 2014 மே மாதம் நடைபெற்ற கொலை ஒன்றில் தொடர்புடையதாக, Shaun Walmsley (29) என்ற குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2017-ம் ஆண்டு குற்றவாளியை Aintree பல்கலைக்கழக மருத்துவமனையில் இருந்து சிறைக்கு அழைத்து செல்லும்போது, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் இருவரின் உதவியுடன் குற்றவாளி அங்கிருந்து தப்பி ஓடினான்

இதனையடுத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த பொலிஸார், யாரேனும் Walmsley சம்மந்தப்பாக தகவல் கொடுத்தால் £20,000 பவுண்ட்ஸ் சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்தனர்

ஆனால் நீண்ட நாட்களாகியும் குற்றவாளி கையில் சிக்காததால், பிரித்தானியாவில் தேடப்படும் முக்கியமான குற்றவாளிகளின் பட்டியலில் Walmsley பெயரையும் சேர்த்தது. இந்த நிலையில், Liverpool பகுதியில் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த குற்றவாளியை ஏராளாமான பொலிஸார் சுற்று வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிக்கு செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது

இதற்கிடையில் குற்றவாளியிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், Walmsley சிறையிலிருந்து தப்பியதும் தன்னுடைய முகம் மற்றும் உடலமைப்புகளை மாற்றி கடந்த 18 மாதங்களாக பிரித்தானிய தெருக்களில் தான் சுற்றி திருந்துள்ளான் என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − two =

*