;
Athirady Tamil News

வன்னி விழிப்புலன் அற்ற சங்க வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு..!! (படங்கள்)

0

வன்னி விழிப்புலன் அற்ற சங்க வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில்

கிளிநொச்சிமாவட்ட மக்கள் அமைப்பின் நிதினுசரனையில் வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கம் நடத்தும் தமிழ்ப் பரா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த மற்றும் வெற்றியீட்டிய வன்னி விழிப்புலன் அற்ற சங்க வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

இன்று காலை பதினோரு மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கதலைவர் ஞானகுமார் அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில்

தமிழ்ப் பரா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த மற்றும் வெற்றியீட்டிய வன்னி விழிப்புலன் அற்ற சங்க வீர வீராங்கனைகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் பரிசுப் பொருட்கள் மூக்குக்கண்ணாடிகள் போசாக்கு உணவுப் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது

நிகழ்வில் சிறப்பு விருந்திரர்களாக கிளிநொச்சிமாவட்ட மக்கள் அமைப்பின் செயலாளர் சுரேஷ் , விஜயராஜா ஆனந்தி, ஆகியோர் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்

குறித்த நிகழ்வில் கிளிநொச்சிமாவட்ட மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் , விழிப்புலன் அற்றோர் சங்க உறுப்பினர்கள் , மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*